வந்துட்டோம்... திரும்பி வந்துட்டோம் : ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி
ஐ.பி.எல். லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த வெற்றியின் மூலம் 11 ஆட்டங்களில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே-ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தியுள்ளது.
2-வது பகுதி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்.சி.பி. அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான வெற்றி குறித்து விராட் கோலி அளித்த பேட்டியில்:
பந்த வீச்சில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று வலுவாக திரும்பியுள்ளோம். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவோம் என்று தன்னம்பிக்கை வைக்க முடியும் என்றால், சரியான திசையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நாங்கள் திரும்பி வந்து ஆதிக்கம் செலுத்துகிறோ
ம்.
குறிப்பாக போட்டியின் போது , எவின் லீவிஸ் விக்கெட் திருப்புமுனை. கார்டன் முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். உறுதி மற்றும் பயமின்மை ஆகியவற்றால் இந்த வெற்றியை பெற்றோம்’ என்றார்.