மீண்டு வா அன்பே- கனிமொழிக்கு வாழ்த்து கூறிய குஷ்பு

Kushboo dmk bjp kanimozhi
By Jon Apr 05, 2021 07:40 PM GMT
Report

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 1 மாத மேலாக தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார் திமுக எம்.பி. கனிமொழி. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். தனது டுவிட்டரில் “எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன.எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! என்று பதிவிட்டிருந்தார்.  

இதனையடுத்து, தற்போது இதனை ரீட்வீட் செய்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, “சீக்கிரமாக கொரோனாவிலிருந்து மீண்டு வா அன்பே” என ஆறுதல் கூறியிருக்கிறார். கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல் நாகரிகத்துடன் குஷ்பு கனிமொழிக்கு வாழ்த்து கூறியதை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குஷ்பு திமுகவில் இருந்தபோது இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.