5 ஆண்டுகளாக கோமாவில் மனைவி! குழந்தை போல் பாதுகாக்கும் கணவர்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக கோமாவில் உள்ள மனைவியை அன்புடன் பார்த்துக் கொள்ளும் கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராகுலும், கோலார் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்பவரும் பெங்களூருவில் வேலை பார்க்கும் போது காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது, எனவே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் திவ்யா கர்ப்பமாகி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார், எனினும் திவ்யாவுக்கு மயக்கம் தெளியவில்லை. ஒருவாரம் கடந்தும், மூச்சும் மட்டுமே விட்டுக்கொண்டிருந்தார், ஆனால் உடலில் அசைவுகள் ஏதுமில்லை, அறுவை சிகிச்சையின் போது அதிகளவு மயக்க மருந்து கொடுத்ததே திவ்யாவின் இந்த நிலைக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல், தன்னுடைய மனைவியை அன்புடன் பார்த்துக் கொள்ள நினைத்தார், இதன்படி தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று தனி அறையில் வைத்து குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார்.
இத்தகவல் வெளியானதும் பலரும் ராகுல்- திவ்யா தம்பதிக்கு உதவி செய்து வருகின்றனர்.