அதிபர் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு - தகவல் அளித்தால் ரூ. 8 லட்சம் பரிசு!
கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்து தகவல் அளித்தால் 8 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொலம்பிய அதிபர் இவான் டியூக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, போகோடாவில் இருந்து கோக்கட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அப்போது சில தீவிரவாதிகள், அவர் சென்ற ஹெலிகாப்டரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் கொலம்பிய அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த நிலையில், அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதி குறித்து தகவல் அளித்தால் 3 பில்லியம் கொலம்பிய பெசொஸ் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்திய மதிப்பின் படி
8 லட்சம் ரூபாய் சன்மானமாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.