வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா!

Australia Japan
By Sumathi Aug 07, 2023 10:09 AM GMT
Report

அழகான மற்றும் விசித்திரமான வண்ண ஏரிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

கானோ கிறிஸ்டல்ஸ்

வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா! | Colourful Lakes And Rivers In The World

உலகம் முழுவதும் சில இடங்களின் மர்மம் வியப்பை தக்கவைத்து கொண்டே இருக்கிறது. புவியியல், மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள்,இயற்கையான தனித்தன்மைகள் நம்மை வியக்க வைக்கிறது.

அந்த வகையில், கொலம்பியா கானோ கிறிஸ்டல்ஸ், வானவில் நிற நதி உலகின் மிக அழகான நதி என அறியப்படுகிறது. ஐந்து வண்ணங்களின் நதி என்றும் அழைக்கப்படுகிறது. அதில் உள்ள பாசிகளால் இந்த நிறங்கள் உருவாகின்றன.

 லகுனா கொலராடா

வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா! | Colourful Lakes And Rivers In The World

பொலிவியா லகுனா கொலராடா, இயற்கை அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சில பாசிகளின் நிறமிகளால் காஃபி நிறத்தில் காட்சியளிக்கிறது.

 ரியோ நீக்ரோ

வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா! | Colourful Lakes And Rivers In The World

அமேசானின் மிகப்பெரிய கிளை நதியான ரியோ நீக்ரோ உலகின் மிகப்பெரிய கருங்கல் நதி என்று கருதப்படுகிறது. நதியின் நீர் கருப்பு நிறமாக தென்படும்.

ஒகாமா க்ரேட்டர்

வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா! | Colourful Lakes And Rivers In The World

ஜப்பான், ஒகாமா க்ரேட்டர் ஏரி ஜாவோ மலையில் அமைந்துள்ளது. இது பண்டாய் மலையின் வெடிப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. உலகின் அழகான ஏரிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஹில்லியர்

வானவில் நிறத்தில் ஏரியா? கண்னை கவரும் இந்த அதிசயம் எங்கு நடக்கிறது தெரியுமா! | Colourful Lakes And Rivers In The World

ஆஸ்திரேலியா, ஹில்லியர் ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் பார்பவர்களை பிரமிக்க வைக்கும். இந்த ஏரி 1970 அடி நீளமும் 820 அடி அகலமும் கொண்டது.