டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து: பலர் கவலைக்கிடம் - பதறவைக்கும் வீடியோ

Maharashtra bestbuslorryaccident
By Petchi Avudaiappan Oct 27, 2021 04:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மகாராஷ்டிராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று முன்னாள் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் லாரி மீது வேகமாக மோதியதால் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. 

இதில் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில்  5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில் அதிக பாராத்துடன் டிப்பர் லாரி மெதுவாக செல்லும் நிலையில், பக்கவாட்டில் கார் ஒன்று செல்கிறது. ஆனால் பின்னால் வேகமாக வந்த பேருந்து நடுவில் புகுந்து சென்றுவிடலாம் என கருதிய நிலையில் போதுமான இடம் இல்லாததால் அதே வேகத்தில் லாரி மீது மோதியது.