சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை

Madras High Court
By Thahir 1 வாரம் முன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரை கொலிஜியம் குழு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

கொலிஜியம் பரிந்துரை 

பணியிட மாற்றம் குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், 7 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

Collegium recommends transfer of High Court judges

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள வி.எம்.வேலுமணி கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யவும்,

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள பட்டு தேவநாத் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யவும்,

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள டி. ரமேஷ் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும்,

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள லலிதா கண்ணேகாந்தி கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கும்,

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள டி. நாகர்ஜுன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும்,

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள டி.ராஜா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும்,

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள அ.அபிசேக் ரெட்டி பாட்னா உயர்நீதிமன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.