தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை

tamilnadu college holiday omicron
By Irumporai Jan 11, 2022 05:05 AM GMT
Report

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என நேற்று அரசு அறிவித்தது.

தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை | Colleges Holiday In Tamil Nadu Till 31St

இந்தநிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 5-ஆம் தேதி மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.