இனி கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் - உயர்கல்வித்துறை
தமிழகத்தில் இனிமேல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 10 மாத காலத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன.
ஆனால் கல்லூரிகளுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் தெரிவிக்க படாமல் இருந்தன. இந்நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.