கல்லூரி மாணவர்களின் கணக்கில் ரூ.1,000 வரவு.., இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்
திமுக ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.
இந்த சூழலில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி தவெக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருந்தது.
திமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மீண்டும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்த தொகை வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.