ராகிங் செய்ததால் நடந்த விபரீதம் ; மன உளைச்சலால் கல்லூரி மாணவி தற்கொலை

commits suicide tiruvallur college student ragging hanged to death
By Swetha Subash Jan 04, 2022 05:29 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகரத்தைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ரோனிஷா என்ற பெண்ணுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கல்லூரியில் படித்து வந்த ரோனிஷா கணவர் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கணவன் அகிலன் வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில், ரோனிஷா மட்டுமே தனியாக இருந்துள்ளார். பின்னர், உறவினர் சிலம்பரசி என்பவர் ரோனிஷா வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கல்லூரி படிக்கும் போதே திருமணம் செய்து கொண்டதால் தோழிகள் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.