ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

pocsoact collegestudentarrested minorgetspregant policeinquiry
By Swetha Subash Mar 31, 2022 08:44 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

பள்ளி மாணவியை கர்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஜெய் கலைசெல்வன் வயது 19.

இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 12 -ம் வகுப்பு படிக்கும் 18 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பம் ஆக்கியுள்ளார்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பமான சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவன் ஜெய் கலைசெல்வனை போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.