திருமணத்திற்கு மறுப்பு - கல்லூரி மாணவி அடித்துக் கொலை - காதலன் வெறிச்செயல்!
திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவியை, அவரது காதலன் அடித்துக் கொலை செய்துள்ளார்.
காதல் விவகாரம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வராஜ். இவரது மகள் சினேகா (21). இவர் அழகப்பா அரசுக் கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் இலுப்பக்குடி புதுகுடியிருப்பைச் சேர்ந்த உறவினரான கூலித் தொழிலாளி கண்ணனை (25) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், சினேகாவை திருமணம் செய்து வைக்குமாறு, அவரது குடும்பத்தாரிடம் கண்ணன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மறுப்பு
ஆனால் அவரது அக்காவின் திருமணம் முடிந்த பிறகே, இதுகுறித்து பேச முடியும் என்று குடும்பத்தினர் கூறிவிட்டனர். தற்போது பதிவுத் திருமணம் செய்துவிட்டு, பிறகு பெரியோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கண்ணன், கூறியுள்ளார்.

இதற்கு சினேகாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் அவரது தாத்தாவை கண்ணன் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சினேகா, காதலனிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், ஏற்கெனவே பதிவுத் திருமணத்துக்காக தான் கொடுத்து வைத்திருந்த சான்றுகளை எடுத்துக் கொண்டு மாத்தூர் ரேஷன் கடை அருகே வருமாறு சினேகாவிடம் மொபைல் போனில் கூறியுள்ளார்.
அடித்துக் கொலை
இதையடுத்து அவற்றை எடுத்துக்கொண்டு சினேகா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து சினோகாவின் தலையில் கண்ணன் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சினேகா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அப்பகுதியினர் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் கண்ணன் தப்பியுள்ளார். தொடர்ந்து, காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தப்பியோடிய கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil