இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன்; காலையில் நேர்ந்த சோகம் - என்ன நடந்தது?
பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளைஞர் காலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் ஹேமச்சந்திரன், கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து பரோட்டா சாப்பிட்டுள்ளார்.
மறுநாள் காலையில் அவர் அசைவில்லாமல் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.