லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி - பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்
லிப்ட் கேட்ட மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர், கோரமங்களாவில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் 21 வயது மாணவி தனது நண்பர்களை சந்தித்து விட்டு, நள்ளிரவு 1 மணியளவில், ஹெப்பகோடியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்பொழுது ஓசூர் மெயின் ரோடு அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்ற லிப்ட் கேட்டுள்ளார். தனது இரு சக்கர வாகனத்தில் மாணவியை ஏற்றிய அவர், மாணவி சொல்லும் பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
விசாரணை
மாணவியின் மொபைலில் இருந்து ஆபத்து கால செய்தி மற்றும் தகவலை(SOS) தொடர்ந்து பெண்ணின் நண்பர்கள் தேடிச்சென்றனர். ஓசூர் சர்வீஸ் சாலையில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அந்த இடத்தில் பேன்ட் மட்டும் அணிந்து முகத்தில் கீறலுடன் ஒருவர் நிற்பதை பார்த்த நண்பர்கள், அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், அந்த நபரிடம் லிப்ட் கேட்பதற்கு முன், அந்தப் பெண் காரில் பயணம் செய்துள்ளார். எதற்காக இரு சக்கர வாகனத்தில் ஏறினார், அவருடன் காரில் யார் பயணம் செய்தார்கள் என்ற விவரங்களை போலீசார் சரிபார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.