தொடரும் பாலியர் புகார்! - பள்ளியை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர் கைது!
திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரியிலும் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுப்பப்படும் புகார்களால் பெற்றோர்கள் கதிகலங்கியுள்ளனர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் நடந்து கொள்ளும் முறையை ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அந்தக் கடிதத்தில், பால் சந்திரமோகன் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்தக் கடிதத்தில், அதே தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, "பால் சாரை பார்க்கப் போகையில்
முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்" என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து தற்போது பேராசிரியர் பால் சந்திரமோகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.