ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லுாரிக்குள் அனுமதிக்க மறுத்த கல்லுாரி முதல்வரால் பரபரப்பு

College Principal Students Hijab Wearing Stops
By Thahir Feb 03, 2022 10:43 AM GMT
Report

ஹிஜாப் (முக்காடு) அணிந்து வந்த மாணவிகளை கல்லுாரி முதல்வர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குந்தாப்பூரில் உள்ள உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் (முக்காடு) அணிந்து வகுப்புகளுக்கு சென்று வருவது வழக்கம் .

இந்நிலையில் ஹிஜாப் (முக்காடு)  அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் காவி நிற தாவணியை அணிந்து கொண்டு கல்லுாரிக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து கல்லுாரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் ஹிஜாப் (முக்காடு) அணிந்து வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் கல்லுாரிக்கு முக்காடு அணிந்து வந்த மாணவிகளை கல்லுாரி முதல்வர் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்.

ஹிஜாப் (முக்காடு) அணிந்து வகுப்புகளுக்கு வர கூடாது எனக் கூறியுள்ளார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் நீண்ட நாட்களாக கல்லுாரிக்கு பர்தா அணிந்த வந்த நிலையில் திடீரென எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இருந்த போதும் முதல்வர் மாணவிகளை கல்லுாரிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும் அவர் மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கவில்லை என்றும், கல்லூரி வளர்ச்சிக் குழுத் தலைவரும் குந்தாப்பூர் எம்எல்ஏவுமான ஹாலடி ஸ்ரீனிவாஸ் ஷெட்டியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் செயல்படுவதாக ராமகிருஷ்ணா மாணவர்களிடம் கூறினார்.

அப்போது குறிப்பிடப்பட்ட சீருடையை தவிர வேறு எந்த விதமான கூடுதல் உடையையும் அனுமதிக்கக்கூடாது என்று ஷெட்டி தனக்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

இதேபோல், ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள எம்.விஸ்வேஸ்வரய்யா அரசு கலை மற்றும் வணிகவியல் கல்லூரியில், இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் (முக்காடு) அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி சால்வை அணிந்து வந்துள்ளனர்.

ஹிஜாப் (முக்காடு) மற்றும் புர்காவை அனுமதித்தால், வகுப்பறைகளில் காவி சால்வைகளையும் அனுமதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

2010ம் ஆண்டு முதல் சீருடை விதி அமலில் உள்ளதாகவும், மாணவர்கள் கட்டாயம் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மாணவர்களுக்கு சீருடையை மாற்ற கல்லூரி அதிகாரிகளால் தனி அறை வழங்கப்பட்டுள்ளது என்று ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.