மாணவிக்கு பிரசவம் பார்த்த வார்டன் -கல்லூரி விடுதியில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகாவில் கல்லூரி விடுதியில் மாணவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார் வார்டன், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு பிரசவம் பார்த்த வார்டன்
கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூர் டவுன் பேளூர் சாலையில் இயங்கி வருகிறது அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி. இந்த விடுதியில் 200-க்கும் மேற்பட்ட மனைவிகள் தங்கி இருந்து பிடித்து வருகிறார்கள்.

அந்த விடுதியில் தங்கி இருந்து படித்து வரும் பியூசி இரண்டாம் ஆண்டு மாணவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி. அவருக்கு விடுதியிலேயே வார்டன் பிரசவம் பார்த்து இருக்கிறார்.
வலுக்கும் எதிர்ப்பு
இதை சமூக நலத்துறை அதிகாரிக்கு மட்டும் அவர் தகவல் தெரிவிக்கிறார். வேறு யாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. சமூக நலத்துறை அதிகாரியும் வெளியே தெரியாமல் மறைத்திருக்கிறார்
பிரசவத்திற்கு பின்னர் மாணவிக்கும் குழந்தைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி விடுதிக்குள் நடந்த இந்த சம்பவம் வெளியே பலருக்கும் இப்போது தெரியவந்திருக்கிறது. இதை அடுத்து பல்வேறு தரப்பினரும் கல்லூரி விடுதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.