கல்லூரி மாணவி சரமாரியாக வெட்டி கொலை - திருமணமான காதலன் வெறிச்செயல்!
கல்லூரி மாணவி நடுரோட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் முறிப்பு
பெங்களூரு, சண்போகநஹள்ளி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ராஷி(19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மதுசந்திரா(26) என்பவருக்கும் ராஷிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியுள்ளது.
சில தினங்களுக்கு பின் மதுசந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி ராஷிக்கு தெரியவந்தது. இதனால் அவர் காதலை முறித்துக் கொண்டுள்ளார். சம்பவதன்று மேய்ச்சலுக்காக விடப்பட்டு இருந்த மாட்டை அழைத்து வர ராஷி சென்றுள்ளார்.
படுகொலை
அப்போது அங்கு வந்த மதுசந்திரா காதலை முறித்து கொண்டது பற்றி ராஷியிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை, மதுசந்திரா சரமாரியாக குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடந்து வருகிறது.