தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jan 06, 2023 06:49 AM GMT
Report

தமிழர்களுடைய நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு என இலக்கிய விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்  கூறியுள்ளார்.

தமிழ் இயக்கத்தின் ஆட்சி

சென்னையில் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இளகிய விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுகவின் ஆட்சி காலம் அப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்றார்.    

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு : முதலமைச்சர் ஸ்டாலின் | College Education Can Tamil Chief Minister

செம்மொழி தகுதியை பெற்று தந்தவர் 

மேலும் அவர் கூறுகையில், தமிழ் மொழி மாநாடு திமுக ஆட்சியில் தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தவர் கலைஞர்.

இன்று பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது.

ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டு தமிழர்களுடைய நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு  என முதலமைச்சர் கூறினார்.