Thursday, Apr 3, 2025

கல்லுாரி மாணவர்களுக்கு 6 மாதங்களில் பட்டம் வழங்க வேண்டும் - யூஜிசி உத்தரவு!

College Certificate Announcement UGC Degree
By Thahir 3 years ago
Report

மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாங்களில் பட்டம் வழங்க வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரியில் பயின்வரும் மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்த பிறகு கல்லுாரி வழங்கும் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லுாரி படிப்பை முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் காத்துக்கிடக்கும் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தற்போது யூஜிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை முடித்த 6 மாதங்களில் பட்டம் வழங்கிட வேண்டும்.

கல்லுாரி மாணவர்களுக்கு 6 மாதங்களில் பட்டம் வழங்க வேண்டும் - யூஜிசி உத்தரவு! | College Degree Certificate Ugc Announce

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டம் வழங்காததால் ஏற்படும் தாமதம் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்ததன் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.