நேரம் சரியில்லை? ஒரு பக்கம் வீட்டில் கொள்ளை - மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விசாரிக்க கலெக்டர் உத்தரவு..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
லால் சலாம் படப்பிடிப்பு
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. அப்பொழுது பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படக்குழுவை விசாரிக்க ஆட்சியர் உத்தரவு
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல இயலாத வகையில் சுற்றிலும் கயிறு கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
வீட்டில் கொள்ளை
லால் சலாம் என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இந்தாண்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டில் இருந்த 60 சவரன தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.