வேலூர் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா முன் பரிசோதனை மையம், ஆக்சிஜன் செறிவூட்டம் மையம் ஆகியவைகள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
கொரோனாவிற்காக கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் மற்றும் கொரோனா முன் பரிசோதனை மையம் ஆகியவைகள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்ததுடன் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கபடும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மணிவண்ணன் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்