Friday, Jul 4, 2025

லிப்ட் கொடுத்து சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - உயிரோடு எரித்த பெற்றோர்!

Attempted Murder Sexual harassment India
By Sumathi 3 years ago
Report

லிப்ட் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற 2 பேர் நடுவழியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

ஜார்கண்ட், கும்லா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது மகளுடன் வெளியூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறார்கள். திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது பேருந்து கிடைக்கவில்லை.

லிப்ட் கொடுத்து சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - உயிரோடு எரித்த பெற்றோர்! | Collective Sexual Abuse Of A Little Girl

பேருந்துக்காக வெகு நேரம் காத்திருந்து பேருந்து கிடைக்காததால் நடந்தே சென்று விடுவது என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

ஆனால் தங்கள் மகள் சிறுமியை நடக்க வைக்க அவர்களுக்கு மனமில்லை. அதனால் அந்த வழியாக பைக்கில் சென்ற இரண்டு பேரிடம் தங்கள் மகளை ஊருக்குள் கொண்டு விட்டுவிடுமாறு கேட்டு இருக்கிறார்கள்.

அவர்களும் சரி என்று சொல்லி அந்த சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று இருக்கிறார்கள் அந்த நபர்கள் நடுவழியில் பைக்கை நிறுத்திவிட்டு அந்த சிறுமியை இரண்டு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.

அதன் பின்னர் அந்த சிறுமியை வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டுப் போயிருக்கிறார்கள். பெற்றோர் வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அந்த சிறுமி அழுது இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேராக சென்று அந்த இருவரையும் அவர்கள் வந்த பைக்கையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி இருக்கிறார்கள். இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

மற்றொருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.