சூடா இல்ல.. சில்லென இருக்கும் பாலைவனங்கள் பற்றி தெரியுமா?
குளிர்ந்த பாலைவனங்கள் இருக்கும் இடங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பாலைவனங்கள்
பொதுவாகவே பாலைவனங்கள் என்றாலே நாம் அனைவருக்கும் வெயில் அடித்து நொறுக்கும் என்று தெரியும். பாலைவனம் என்றாலே சூடாக இருக்கும் என்பது தான் ஞாபகம் வரும், ஆனால் குளிர்ந்த பாலைவனங்களும் உள்ளது. பாலைவனம் என்பது அதீத வெப்பத்தையும் அதீத குளிரையும் குறிக்கும். குளிர்ந்த பாலைவனங்கள், கிரீன்லாந்தில் உலகின் மிகப்பெரிய குளிர்ந்த பாலைவன தேசிய பூங்கா உள்ளது.
மங்கோலியா மற்றும் சீனாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள மணல் மண் மற்றும் சிறிய கற்களால் மூடப்பட்ட கோபி பாலைவனம். பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள ஆர்க்டிக் உலகின் குளிர்ந்த பாலைவனங்களில் ஒன்றாகும். இது அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் ரஷ்யா உட்பட பல பகுதிகளுக்கு பரவியுள்ளது.
குளிர்ந்த இடங்கள்
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய பாலைவனத்திற்கு அருகில் கிரேட் பேசின் பகுதியில் சால்ஃபான்ட், ஹம்மில் மற்றும் குயின் பள்ளத்தாக்குகள் போன்ற பல படுகைகள் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள நமீப் அதன் குளிர் வெப்பநிலையால் கடற்கரையோரத்தில் மணல் திட்டுகளால் மூடப்பட்டிருக்கும். மத்திய ஆசியாவின் பகுதியில் அமைந்துள்ள துர்கெஸ்தான் பெரும்பாலும் பரந்த மணல் திட்டுகளால் மூடப்பட்டிருக்கும்.
பூமியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா, உலகிலேயே மிகவும் வறண்ட, காற்று வீசும் மற்றும் குளிரான கண்டமாகக் கருதப்படுகிறது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அட்டகாமா பாலைவனம் குளிர்ந்த பாலைவனமாகும். இதன் மேற்பரப்பு செவ்வாய் கிரகத்தை போல் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் வெளியானது.
ஈரானிய பாலைவனம் உலகின் மிகப்பெரிய உப்பு படுகைக்கு பிரபலமானது. மணல் திட்டுகள் மற்றும் பாறை மண்ணால் மூடப்பட்ட தக்லமாகன் பாலைவனம் இமயமலையின் சாரலில் அமைந்துள்ளது. "தக்லா மகான்" என்றால் "திரும்பி வராத இடம்" என்று அர்த்தம்.