தீராத இருமல், சளியா? இந்த நாட்டு மருந்தை ட்ரை பண்ணுங்க
இருமல், சளி வந்துவிட்டாலே மருத்துவரிடம் செல்லாமல் எளிமையான வீட்டுப் பொருட்களை கொண்டே அவற்றை கட்டுப்படுத்தலாம். அந்த மருந்துக்கு தேவையான பொருட்கள் என்ன? எப்படி தயாரிப்பது? என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள் இஞ்சிச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன் தேன் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை - 1/2 எலுமிச்சை செய்முறை ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அத்துடன் இஞ்சிச் சாறு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து லேசாக கொதிக்க வைக்கவும்.
பின்னர் இவற்றை வடிகட்டி குடிக்கவும். காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.
இதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன் செரிமான மண்டலத்தையும் வலுவாக்குகிறது.