சிரித்தபடி மன்னிப்பு கேட்ட மாணவி; விரட்டி சென்று நடுரோட்டில் முத்தம் - நடந்தது என்ன?

Coimbatore Sexual harassment
By Karthikraja Jan 30, 2025 04:30 PM GMT
Report

மன்னிப்பு கேட்ட மாணவியை இளைஞர் விரட்டி சென்று முத்தமிட்டுள்ளார்.

மோதிய வாகனம்

கோவையில் 20 வயது கல்லூரி மாணவி நேற்று முன்தினம் (28.01.2025) இரவு குனியமுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

coimbatore youth

அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த சிறிய குழியில் இருசக்கர வாகனம் இறங்கிய போது, நிலை தடுமாறியதில், அந்த வழியாக வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தின் மீது மாணவியின் வாகனம் மோதியது.

சிரித்தால் முத்தம்

இதனையடுத்து இளைஞரை பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே மன்னித்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்று விட்டார். மாணவி தன்னை பார்த்து சிரித்ததை, மாணவிக்கு தன்னை பிடித்துள்ளதாக நினைத்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் மாணவியை பின்தொடர்ந்துள்ளார். 

1 கிலோ மீட்டர் மாணவியை விரட்டி சென்று அவரது வாகனத்தை மறித்த இளைஞர் மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடி விட்டார். கைது இந்த சம்பவம் தொடர்பாக, மாணவி குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

arrest

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோவைப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது செரீப் என்பவரை கைது செய்தனர். மாணவி சிரித்துப் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டு முத்தமிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.