அறிய வகை வெள்ளை நாக பாம்பு; திரண்ட மக்கள் - வைரல் ஃபோட்டோ!
கோவையில் குடியிருப்பு பகுதியில் படம் எடுத்து நின்ற வெள்ளை நாகத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெள்ளை நாகம்
கோவை மாவட்டத்தில், கிறிச்சி பகுதியில் சக்தி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், சுமார் 5-அடி நீளமுள்ள வெள்ளை நாகம் புகுந்துள்ளது. இது அறிய வகை என்பதால், இதனை காண அங்கிருந்த மக்கள் கூட்டமாக சென்று பார்த்தனர்.
மேலும், அங்கிருந்தவர்கள் வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை
தொடர்ந்து, அங்கு வந்த தன்னார்வலர், பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் மாங்கரை வனப்பகுதிக்குள் பாம்பை விடுவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக வனத்துறையினர், இவ்வாறு வெள்ளை நிறத்தில் நாகப் பாம்பை காண்பது அரிது. இது மரபணு குறைபாடு காரணமாக இவ்வாறு வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறினார்.