2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சோகம்
train accident
coimbatore
elephant death
By Anupriyamkumaresan
கோவை மதுக்கரை அருகே கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வனப்பகுதிகளில் யானைகள் உலாவருவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவு மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை 2 குட்டி யானைகளோடு ஒரு பெரிய யானை கடக்க முயன்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக கேரளாவில் இருந்து வந்த ரயில் 3 யானைகள் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைகளின் உடலை பரிசோதித்து வருகின்றனர்.