ஒரே அறையில் இரு கழிப்பிடம் : காரணம் இதுதான் விளக்கம் கொடுத்த மாநகராட்சி

Coimbatore Viral Photos Toilet
By Irumporai Sep 08, 2022 08:34 AM GMT
Report

கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி பொது கழிப்பிடத்தில் ஒரே அறையில் இரண்டு கழிப்பிடங்கள் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொது கழிப்பிடத்தில் இரண்டு கழிப்பிடங்கள் 

கோவை மாநகராட்சி 66வது வார்டு அம்மன்குளம் பகுதியில் பொதுகழிப்பிடம் ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு கழிப்பிட அறையில் 2 கழிப்பிடங்கள் உள்ளன. ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் அருகருகே உள்ளது, நடுவில் எந்த தடுப்பும் இல்லை.

ஒரே அறையில் இரு கழிப்பிடம்  : காரணம் இதுதான் விளக்கம் கொடுத்த மாநகராட்சி | Coimbatore Toilet Issue Corporation Explanation

இந்த கழிப்பிடம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து மாநகராட்சி அதிகாரி கொடுத்த விளக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் திறந்தவெளியில் மலம் கழித்தல் அதிகமாக இருந்தது. 

மாநகராட்சி விளக்கம்

 பொது கழிப்பிடங்களில் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக இவ்வாறான அறையில் இரண்டு கழிப்பிடங்கள் வைத்து கட்டப்பட்டன.

தற்போது உள்ள கழிப்பிடம் குழந்தைகளுக்காக கட்டப்பட்டதுதான். அது தற்போது பயன்பாட்டிலும் இல்லை. இந்த கழிப்பிடத்தை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.