கோவையில் தொடரும் காட்டுத் தீ : 7-வது நாளாக தீயை அணைக்க போராட்டம்

Fire Crime
By Irumporai Apr 17, 2023 06:25 AM GMT
Report

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணி 7 வது நாளாக தொடர்கின்றது.

கோவையில் காட்டு தீ

தமிழகத்தின் கோவை மாவட்டம் ஆலாந்துறை வனப்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பயங்கர காட்டு தீ திடீரென ஏற்பட்ட இந்த காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், தீ மிகவும் வேகமாக பரவி வருவதால் தீயை அனைக்க வனத்துறையினர் சிரமபட்டு வருகிறார்கள்.

கோவையில் தொடரும் காட்டுத் தீ : 7-வது நாளாக தீயை அணைக்க போராட்டம் | Coimbatore Terrible Fire Accident

தீயை அணைக்க போராட்டம்

காட்டு தீயை அணைக்க 300-க்கும் மேற்பட்ட வனப் பிரிவுகளைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் இணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தென்னக விமானப்படையினர் எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டரை சூலூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் இருந்து காலை அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த நடவடிக்கைக்காக கேரளாவின் அண்டை மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையில் இருந்து IAF குழு தண்ணீரை எடுத்தது. அதன்படி நேற்று ஹெலிகாப்டர் நேற்று தீயணைப்புப் பகுதிக்கு சென்று தீயை அணைத்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரை இன்னும் முழுமையாக தீயை அணைக்கமுடியவில்லை. 7வது நாளாக வன துறையினர் தீயை அணிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்