பள்ளி முதல்வரை கைது செய்யுங்கள் - மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை செய்ததாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவியின் வீட்டின் முன்பாக மாணவர்கள், பல்வேறு அமைப்புகள், சக மாணவர்களுடைய பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போராட்டக்காரர்கள், மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லைக்கு துணை இருந்து, மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்'' என்று தெரிவித்தனர்.
12 மணி வரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.