மாணவி பாலியல் வன்கொடுமை; அதிகபட்ச தண்டனை - கமிஷனர் பதில்
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் காவலன் எனும் செயலியை தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்று ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் காவலன் ஆப் செயலியை மூன்று முறை ஷேக் செய்தால் போதும். அதிலிருந்து SOS Call அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்துவிடும். 100-க்கு கூட போன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
முதல்வர் நடவடிக்கை
இல்லாவிட்டால் காவலன் ஆப்பை ஓபன் செய்து அதில் எஸ்ஓஎஸ் என்ற பட்டனை மட்டும் பிரஸ் செய்தால் போதுமானது. எனவே இந்த செயலியை பெண்கள் தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஆபத்தான காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.