கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திடீர் நீக்கம்!
கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் நீக்கம் அவருக்கு பதிலாக டாக்டர்.கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு கோஷ்டி பூசலேகாரணம் என சர்ச்சை எழுந்த நிலையில் தென்றல் செல்வராஜ் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் (பொள்ளாச்சி), கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வரதராஜனுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென அந்த அறிக்கையில்குறிப்பிட்டப்பட்டுள்ளது.