கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் அளித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும், வானதி ஸ்ரீனிவாசன் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "எப்போதும் தமிழகம் அதிக வாக்குகளை பதிவு செய்யும் மாநிலமாக நிகழ்கிறது. தமிழக மக்கள் இந்த நாளை மிக முக்கியமான நாளாக கருத வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு வந்து உங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். எதிர்கால சந்ததிகளை வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றார்.