சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

sexual abuse jail coimbatore driver 20 year
By Anupriyamkumaresan Oct 22, 2021 08:24 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான ஆனந்தகுமார், கடந்த 2017 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.