அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ் - மகிழ்ச்சியில் செந்தில் பாலாஜி

M K Stalin DMK AIADMK
By Thahir Dec 07, 2022 05:13 AM GMT
Report

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

அதிமுகவில் இருந்து விலகல் 

ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கோவை செல்வராஜ், என்னோட 50 வருட அனுபவத்தில் எனக்கு எல்லா கட்சியோட வரலாறும் தெரியும்.

இனி இவர்களோடு சேர்ந்து பயணித்தால் கேவலம் தான் எனவே அதிமுக வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். திமுக வெறுக்க கூடிய கட்சி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றாக செயல்படுகிறார்.

திமுகவில் இணைவது உறுதி 

திமுகவில் மட்டும் தான் இன்றைக்கும் திராவிட பாரம்பரியம் உள்ளது. அதனால் திமுகவில் இணைவது தப்பில்லை. என்னோட நண்பர்களுடன் கலந்து பேசி எல்லாரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு முடிவெடுப்பேன் என அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Coimbatore Selvaraj joined DMK

இந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் சென்ற கோவை செல்வராஜ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். 

அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.