கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

Schools Leave Rain Coimbatore
By Thahir Nov 10, 2021 04:34 PM GMT
Report

தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை (நவ.11) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 4 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது.

இதையடுத்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.11) மாலை வடகடலோர பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கக்கடலையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி கோவையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்