விஷப்பொடி தூவி கொடூரம் - பிரியாணிக்காக காகங்களை கொன்றதாக பரபரப்பு!
காகங்களை பிடித்து கொலை செய்த நபர் பொதுமக்களால் பிடிபட்டுள்ளார்.
காகங்கள் கொலை
பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனுார் பகுதியில், சில நாட்களாக மர்மமான முறையில் காகங்கள் இறந்து வந்தன. இந்நிலையில், நாகராஜ் என்பவரின் தோட்டம் அருகே, நபர் ஒருவர், சாக்குப்பைகளில், இறந்த காகங்களை போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் விசாரிக்க முற்படுகையில் தப்புச்சென்றுள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். அதன்பின் விசாரணையில் விவசாயிகள், மூக்குப்பொடியுடன் ஏதோ விஷ மருந்து கலந்து துாவியுள்ளார். அதை உட்கொண்ட காகங்கள் மயங்கி விழுந்துள்ளன.
பிரியாணிக்கா.?
தோட்டங்களிலும், ரோட்டோரங்களிலும் மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து விட்டன. இந்த நபர் துாவிய மருந்தை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், காகங்களை கொன்ற நபர் சிஞ்சுவாடியை சேர்ந்தவரான, சர்க்கஸில் வேலை பார்க்கும் சூர்யா, 37, என்பது தெரியவந்தது. குஜராத்தில் இருந்து வந்த அவர், சிஞ்சுவாடியில் நீண்ட காலமாக வசிக்கிறார். வெள்ளை படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்புக்காக காகங்களை கொன்றதாக கூறியுள்ளார்.
ஆனால், ஏதோ கடைகளில் விற்று லாபம் பார்க்க இந்த செயலை செய்து இருக்கலாம். பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. அதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.