விளம்பரம் பார்த்தால் பணம்; மோசடி புகார் - ஆனால், நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் திரண்டது எப்படி?

Coimbatore
By Sumathi Jan 30, 2024 05:11 AM GMT
Report

நிறுவனம் ஒன்றின் மீதான புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

My V3 Ads

கோவையை மையமாகக் கொண்டு `My V3 Ads’ என்ற ஆப் செயல்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் இயங்கி வருகிறது. தினமும் 2 மணி நேரம் வீடியோ பார்ப்பது, புதிய நபர்களை இணைப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம்.

coimbatore

ரூ.360 தொடங்கி ரூ.1,21,000 வரை பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக இணையலாம். இதன் மூலம் தினசரி ரூ.5 தொடங்கி ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளது.

குவிந்த கூட்டம் 

மேலும், மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள், அழகுசாதனப்பொருள்கள் வழங்கப்படும் என்றும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் பல ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.

`My V3 Ads’

குறிப்பாக, இந்த ஆப்பை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நிறுவன உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், அவ்வப்போது நிறுவனம் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியாகப் பணம் வழங்குவதாகக் கூறி அதனை மறுத்துள்ளனர்.

என்ன காரணம்?

தொடர்ந்து, பாமக-வைச் சேர்ந்த அசோக் ஶ்ரீநிதி என்பவர், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்துக்குப் புறம்பானது. தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைகாட்டி, பொதுமக்களை ஏமாற்றிப் பெரும் தொகையை வசூலித்துவருவதாக புகாரளித்துள்ளார்.

I'm Safe - பெண்கள் பாதுகாப்பிற்கான புதிய ஆப் அறிமுகம்!

I'm Safe - பெண்கள் பாதுகாப்பிற்கான புதிய ஆப் அறிமுகம்!

அதன்படி, நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீலாம்பூர் அருகேயுள்ள புறவழிச்சாலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 10,000-க்கும் மேற்பட்டோர் நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாள்களாகவே இந்த எதிர்ப்பு கூட்டத்தை ஒருங்கிணைக்க, My V3 Ads உரிமையாளர், வரவில்லையென்றால் உங்களுக்கு வருமானம் நின்றுவிடும். உங்கள் மெம்பர்ஷிப் குறைக்கப்படும். நம் நிறுவனத்தில் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம்கொண்டவர்கள் தவறாமல் வாருங்கள் என வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாகவே கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது.