கோவையில் திருக்குறளை மேற்கொள் காட்டிய மோடி

modi twitter bjp
By Jon Mar 03, 2021 05:55 PM GMT
Report

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். பின்னர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் கூறினார் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தொழில் நகரமான கோவைக்கு வந்ததில் மகிழ்ச்சி என கூறினார்.

பவானி சாகர் அணை விரிவாக்கத்தால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும். இதனால் 2 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் கிடைக்கும். இந்த திட்டம் நமது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். புதிய மின் உற்பத்தி திட்டத்தில் உற்பத்தியாக உள்ள மின்சாரத்தில் தமிழகம் 65% பெறும் என்று கூறினார்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிப்பதாகவும்,தொழில் வளர்ச்சிக்கு தேவையான தடையற்ற மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கடல்சார் வணிகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி குறித்த பாரம்பரியம் கொண்டது.

தமிழகம் என்று தெரிவித்த மோடி, வ.உ.சியின் தொலை நோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிப்பதாக கூறிய மோடி,உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினார்.