‘நான் கடத்தப்படவில்லை’ -கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்!
கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பரபரப்பு சம்பவம்
கோவை, தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர்

அப்பெண்ணை தாக்கி காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் வீடியோ
இந்நிலையில், கோவை இருகூரில் கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் கணவருடன் காரில் பேக்கரிக்கு சென்று டீ குடித்துவிட்டு வந்தோம்.

அப்போது காரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காரில் இருந்து இறங்கினேன். நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என எண்ணி கணவர் வேகமாக என்னை காருக்குள் இழுத்தார்.
காருக்குள் இருந்த கணவர் என்னை அடித்தார். நானும் அவரை அடித்தேன்” என தெரிவித்துள்ளார்.