ரத்தம் சொட்ட சொட்ட... கத்திபோடும் திருவிழா - அம்மனுக்கு நேர்த்திக்கடன்!
கோவிலில் நடைபெற்ற கத்திபோடும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
கத்திப்போடும் திருவிழா
கோவை, டவுன் ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜய தசமி தினத்தன்று பாரம்பரிய முறைப்படி கத்திப்போடும் திருவிழா நடைபெறும்.
அதன்படி, விஜய தசமி தினமான இன்று சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து நுற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சவுடேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
நேர்த்திக்கடன்
ஊர்வலத்தின்போது, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கோவிலுக்குப் பாத்தியபட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கத்தியால் தங்களது மார்பு மற்றும் கை பகுதிகளில் கத்தியால் வெட்டிய படி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ... தீசுக்கோ..." என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் அம்மனை அழைத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு திருக்கால்யாணம் வைபவமும் நடைபெற்றது.