ஓடைக்குள் சரிந்து விழுந்த 2 மாடி வீடு; கடைசி நிமிட அறிகுறி - பதைபதைக்கும் காட்சி!

Coimbatore Government of Tamil Nadu Viral Photos
By Sumathi Jan 21, 2025 08:30 AM GMT
Report

கால்வாய் தூர்வாரும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூர்வாரப்பட்ட கால்வாய்

கோவை, சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதனை மாநகராட்சி சார்பாக தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

coimbatore

அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி கொண்ட வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ளது. அதே போல அருகில் இருந்த ஓட்டு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோமியம் குடிச்சா காய்ச்சல் போகும்; சென்னை ஐஐடி காமமோடியா! சொன்னது யார் தெரியுமா?

கோமியம் குடிச்சா காய்ச்சல் போகும்; சென்னை ஐஐடி காமமோடியா! சொன்னது யார் தெரியுமா?

சரிந்த வீடுகள்

தொடர்ந்து, கால்வாய் அருகே வீடு கட்டப்பட்ட இருந்ததால் மாநகராட்சி அந்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதில் சங்கனூர் கால்வாயை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீடுகளில் உள்ளவர்களை காலி செய்ய மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு காலி செய்யப்பட்டுள்ளது.

ஓடைக்குள் சரிந்து விழுந்த 2 மாடி வீடு; கடைசி நிமிட அறிகுறி - பதைபதைக்கும் காட்சி! | Coimbatore House Fall Down Canal Collapsing

இந்த பணியின் போது வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரியில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

ஓடைக்குள் சரிந்து விழுந்த 2 மாடி வீடு; கடைசி நிமிட அறிகுறி - பதைபதைக்கும் காட்சி! | Coimbatore House Fall Down Canal Collapsing