கோவையில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிலையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
பள்ளிக்கூடங்களின் கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் அமைந்துள்ள ஆய்வகங்களை ஆய்வு செய்து, வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களையும் பள்ளியில் அமைந்துள்ள சிறிய நூலகங்களையும் பார்வையிட்டார்.
மேலும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் உரையாற்றியபோது,பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எந்த நேரமும் தயக்கமின்றி என்னிடத்தில் கேட்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதில், கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.