சிறுவனுக்கும் வன்கொடுமையா? - 17 வயது சிறுவனை கெடுத்த 19 வயது பெண்!
கோயம்புத்தூரில் 19 வயது பெண் பொள்ளாச்சியில் தன்னை விட இரண்டு வயது சிறிய சிறுவனை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 11 ஆம் வகுப்பு முடித்த அந்த பெண், பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவனுடன் நட்பு கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த நகரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.
17 வயது சிறுவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சென்று வந்துள்ளான். இந்த நட்பு சிறுது காலத்தில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று, அவர்கள் இருவரும் பழனிக்கு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அடுத்த நாள், கோயம்புத்தூருக்கு திரும்பும் போது செம்மேடு அருகே அந்தப் பெண் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுவனுக்கு கடுமையான வயிற்று ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் அவரை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் பிரித்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.