'' கோவை எப்போதுமே திமுகவுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் '' : பாஜக அண்ணாமலை கிண்டல்

dmk coimbatore annamalai
By Irumporai Feb 07, 2022 10:33 AM GMT
Report

தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய அண்ணாமலை

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருப்பதாக கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது என்று விமர்சித்தார்.

மேலும் மக்களுக்கும் வாக்கு பெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். இந்த நகர்ப்புற தேர்தலில் பாஜக தனது பலத்தை தெரிந்து கொள்ளவே தனித்து போட்டியிடுவதாகவும், வேட்புமனு பரிசீலனையின் போது, ஆளும் கட்சியின் தலையீடு அதிகம் இருந்ததாக கூறிய அவர் திமுக தோல்வி முகத்தை சந்திக்க துவங்கி இருப்பதாக அண்ணாமலை கூறினார்.