கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை - அமைச்சர் செந்தில் பாலாஜி

Coimbatore DMKFort MinisterV.SenthilBalaji V.SenthilBalajiSpeech MKStalinFortCoimbatore
By Thahir Feb 26, 2022 07:02 AM GMT
Report

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக சந்தித்து களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த நகர்புற தேர்தலில் வெற்றி என்பது முதலமைச்சர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எனவும்,

கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை - அமைச்சர் செந்தில் பாலாஜி | Coimbatore Dmk Fort Minister V Senthil Balaji

கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் அதிமுகவினர் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வெற்றி பெற்றவர்கள் கேட்டு வருவதாகவும்,

பொதுவான பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்தார். முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று சிறப்பு நிதிகளை பெற்று செயல்படுத்தப்படும் எனவும் நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலமாக நன்றி சொல்வோம் என தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் திட்டங்களுக்காக நிதி பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தேர்தல் சிசிடிவி காட்சிகளோடு வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்றுள்ளது - இது எப்படி செயற்கையான வெற்றியாக இருக்கும்? என தெரிவித்தார்.

மேயராக விரும்பும் மாமன்ற உறுப்பினர்களிடம் விருப்ப கடிதம் கேட்டுள்ளோம் - அவை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவர் முடிவெடுப்பார் என தெரிவித்த அவர்,

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும் எனவும் மக்கள் ஒருபோதும் கோவையை அதிமுகவின் கோட்டை என சொல்லவில்லை - இனி எப்போதும் கோவை முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டை தான் என தெரிவித்தார்.