கோவை கார் வெடிப்பு சம்பவம்; பயங்கரவாத சம்பவங்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Coimbatore Government of Tamil Nadu
By Thahir Oct 27, 2022 05:59 AM GMT
Report

அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு  மாவட்ட ஆட்சியர் சமீரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள அனைத்து ஜமாத் அமைப்புகளுடன் (இஸ்லாமிய மத அமைப்பு) மாவட்ட ஆட்சியர் சமீரான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்; பயங்கரவாத சம்பவங்கள் குறித்த தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் | Coimbatore District Collector S Request

இந்த பேச்சுவார்த்தை பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘ இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.’ என செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.