கோவை டவுன் ஹால் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்

city tamilnadu bjp candidate coimbatore
By Jon Mar 18, 2021 02:33 PM GMT
Report

கோவை டவுன்ஹால், இடையர் வீதி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் நிறுத்தப்பட்டுள்ளார், இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து களப்பணியும் செய்து வருகிற வானதி சீனிவாசன், இன்று இடையர் வீதி பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக, வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட வானதி ஸ்ரீனிவாசன் டவுன்ஹால், இடையர் வீதி, போன்ற பல்வேறு பகுதியில் உள்ள அனைத்து பொது மக்களிடமும், பலதரப்பட்ட, வியாபாரிகளிடமும், , சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களிடமும், நேரடியாக சந்தித்து வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் அனைவரையும் பார்த்து கைகளை அசைத்தபடி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர், தனது வாக்குகளை சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, பெருவாரியான மக்கள் வேட்பாளர் வானதி சீனிவாசனை பார்த்து கைகளை அசைத்து, ஆரவார படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.